விஜய்யை எனக்கு போட்டியாக நினைத்தால்… ரஜினி பரபரப்பு பேச்சு !
தமிழில் 3 மற்றும் வை ராஜா வை என இரு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது புதிதாக இயக்கியுள்ள படம், லால் சலாம்.இப்படத்தில்‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.இப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டுடாங்க. எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுறாங்க. அது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே விஜய்யை பார்த்து வருகிறேன்.தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, ‘என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் வேண்டுகோள் வைத்தார்.. அப்போது நான் விஜய்யிடம் ‘உங்களால் முடியுமா?’ என்று கேட்டேன், அவரும் முடியும் என்றார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்திருக்கிறார். தற்போது விஜய் நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சி செய்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை உள்ளது. எனக்கு போட்டி நான் தான் என நடிகர் விஜய்யே குறிப்பிட்டிருக்கிறார். என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே கூறியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள்” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்