லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில், அப்படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில்,”சமூக வலைதளத்தில் இருந்து எப்போதுமே விலகியே இருக்கிறேன். ஆனாலும், என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை சுட்டி காட்டிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக சங்கி என முத்திரை குத்தப்படும் அந்த வார்த்தை எனது மனதை ரொம்பவே உறுத்துகிறது. உங்களுக்கு எல்லாம் தெளிவா புரியும்படி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அப்பாவ சங்கி-ன்னு சொல்லும் போது கோபம் வரும்.இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி இல்லை. எங்கப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மதங்களை கடந்து மனிதர்களை மட்டுமே நேசிக்க கூடிய மனிதர்” இவ்வாறு அவர் பேசினார்.