சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘அதே முகம் ’.!
‘ரீல் பெட்டி’ மற்றும் ‘தரிகோ பிலிம் ஒர்க்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம்,அதே முகம். ‘’.இதில்,கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், ‘நக்லைட்ஸ்’ கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்துள்ளார் .இப்படத்தை எழுதி இயக்கியுள்ள சுனில் தேவ் கூறுகையில்,”அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .இதன் படப்பிடிப்பை
ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து நடத்தியுள்ளோம் . மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக இப் படம் உருவாகியுள்ளது. ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை அருண் விஜயகுமார் கவனிக்க, சரண் ராகவன் பின்னணி இசையமைத்துள்ளார் , இதுவரை பட வினியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்