துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதில்,அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.முதலில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக அஜர்பைஜானில் நடந்த படப்பிடிப்பில் அஜித்தும் முழுமூச்சுடன் கலந்துகொண்டார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியது படக்குழு
அஜித்தும் தற்போது குட்டி பிரேக் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிரேக்கில் அவர் தனது குடும்பத்தினருடன் முழுமையாக நேரத்தை செலவிட்டுவருவதக்க கூறப்படுகிறது.
இந்நிலையில்,சிறிய ஓய்வுக்கு பின்னர் மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்று படப்பிடிப்பை தொடங்கியுள்ள மகிழ் திருமேனி அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் வரை,அஜித் அல்லாத மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் 75 சதவீத காட்சிகளை அஜர்பைஜானில் நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்த மகிழ் திருமேனிக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளதாம்
அஜர்பைஜானில் தற்போது மோசமான வானிலை நிலவிவருவதால் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், இனியும் அஜர்பைஜானில் முகாமிட்டிருந்தால் தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரும் என்பதால் படக்குழு சென்னைக்கு திரும்பிவிட்டதாகவும் மீதம் உள்ள காட்சிகளை சென்னைக்கு அருகிலேயே ‘செட்’ போட்டு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.