நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், இரட்டை வேடத்தில் ’கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில்,சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக குடும்பத்துடன் பின்லாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது .
இந்நிலையில் தற்போது சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவுடன் உறைபனியில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் உறை பனியில், அழகிய காட்சிகளின் பின்னணியில் இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கும் காட்சிகள் மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டு காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Couple Goals 😍💞
Have a Wonderful day @Suriya_offl 🫶🌻#Kanguva #Sujo#Suriya pic.twitter.com/NehWLylM0O
— 𝐑𝚰𝐘𝐀 (@RiyashaTweets) January 30, 2024