ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்.கே.23’ பட பூஜை இன்று தொடங்கியது!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயலான் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 23ஆவது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வரு,டம் வெளியான நிலையில் இன்று காதலர் தினத்தையொட்டி ‘எஸ் கே 23’ படத்தின் பூஜை நடந்தது. இந்நிகழ்வில் அனிருத், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்..
இப்படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார் .அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான வரும் 17-ம் தேதி வெளியிடப்படும் என்கிறார்கள். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் . மோகன்லால், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனராம்..