காதலர் தினத்தில் வெளியான ‘ராமம் ராகவம்’.சிறப்புக்காட்சி !

 

‘ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ்’ பிரபாகர் ஆரிபாகா, ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில்,தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படம் ‘ராமம் ராகவம்’.

இதில், சமுத்திரக்கனி , தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில் ,சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு உள்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் திரைக்கதை எழுதி தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார்.இப் படத்தின் முதல் காட்சியை காதலர் தினத்தையொட்டி, சமூக வலைதளங்கள் வழியாக நடிகர் ராம் பொதினேனி வெளியிட்டுள்ளார் மேலும், இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு, “தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். என்றும் பதிவிட்டுள்ளார்

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், அமலாபுரம், ராஜமுந்திரி, சென்னை ஆகிய இடங்களில் நாத்தி முடிக்கப்பட்டுள்ளது.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.