நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜாய் ஸ்டார் என்டர்பிரைசஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில்கே எம் இளஞ்செழியன் மற்றும் எம். கோடீஸ்வர ராஜு இணைந்து தயாரித்துள்ள புதியபடத்திற்கு ‘தங்க முட்டை’என பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்த்தின் மூலம் இயக்குனர்கள் கவுதம் மேனன், ராஜீவ் மேனன், ஆர் கண்ணன் உள்ளிட்டவரிடம் உதவி இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ள கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில்,இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,” இது காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம்.தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகி வருகிறது. படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் நடித்து வருகிறார். கதாநாயகியாக ஸ்ருதி சுக்லா நடித்துள்ளார். இவர்களுடன் ரோபோ சங்கர்,சரண்ராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதுவரை செய்யாத காமெடி வில்லன் கதாபாத்திரத்தில் சரண்ராஜ் நடித்துள்ளார்.இதன் படப்பிடிப்பை தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். திருட்டுத் தொழில் செய்யும் அதிர்ஷ்டமே இல்லாத திருடனான சம்பூர்ணேசுக்கு, நாயகி ஸ்ருதி சுக்லா மூலம் ‘திடீர்’ அதிர்ஷ்டம் வருகிறது. அது எப்படி வருகிறது என்பது தான் இப் படத்தின் கதை. இதில் ‘பார்’ நடனம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் நீண்டஇடை வெளிக்கு பிறகு பிரபல நடிகை கிரண் நடனம் ஆடியுள்ளார். அவரது பாடல் காட்சிகள் ஒரே நாளில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 18 மணிநேரம் அவர் நடனமாடிய காட்சிகள் எடுக்கப்பட்டது. சளைக்காமல் கிரண் நடனமாடி ஒத்து ழைப்பு தந்தார். விரைவில்இப்படம் திரைக்கு வர உள்ளது என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை அகில் சசிதரன் கவனிக்க,சமீர் தாண்டன் இசையமைத்து வருகிறார்.