பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான நடிகர் தனுஷ், தனது 39 வது படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார். வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் தனுசுடன்,எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு போஸ்டரில் தனுஷின் மிரட்டலான தோற்றம் இடம்பெற்றுள்ளது. அதில் மொட்டை தலையில் கொஞ்சம் முடி வளர்ந்த லுக்கில் முகம் காட்டாமல் திரும்பி நிற்கும் தனுஷின் முதுகில் ரத்தம் வடிவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷின் முழு மிரட்டல் தோற்றம் வெளியாகியுள்ளது படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது வெளியாகி உள்ள தனுஷின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் மொட்டை தலையுடன் வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார். இதில் செஃப்கள் அணியும் உடையை அவர் அணிந்து உள்ளார்.