‘அடடே’ மனோகர் மரணம்!
பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும்

திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‘அடடே’ மனோகர் சென்னை குமணன் சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சிலவருடங்களாக வயது முதிர்வு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது . அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்துமுள்ள அடடே மனோகர் இதுவரை கிட்டதட்ட 15 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்;
1986 -ல் இவர் இயக்கி நடித்த ‘அடடே மனோகர்’நகைச்சுவை தொடர்.இவருக்கு ‘அடடே மனோகர்’ என்ற செல்லப் பெயரை வாங்கித் தந்தது