நடிகை நித்யாமேனன் புதிய முயற்சியாக பேண்டஸி ரோம் .காம்.படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ,கதையின் நாயகர்களாக வினய் ராய், நவ்தீப் ,பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் என பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடிக்க உள்ளது.
இப்படத்தின் கதை,திரைக்கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் “காமினி”. இவர் இயக்குனர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ், பாப்டர் “மீடியா ” ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை ப்ரீத்தா ஜெயராமன் கவனிக்கிறார்.