‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா உள்ளிடவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், ‘கள்வன்’ வரும் ஏப்ரல் 4 அன்று வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்,, “இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். ’பொல்லாதான்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்- இவானா ஜோடி நன்றாக உள்ளது. இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம். பாரதிராஜா சாரும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசயம். உங்கள் பயோபிக்கும் சீக்கிரம் யாராவது எடுப்பார்கள். பாரதிராஜா அருகில் உட்கார தகுதியானவர் வெற்றிமாறன். எனக்குப் பிடித்த இயக்குநர் அவர். ஷங்கர் என்ற பெயர் யானை மாதிரியான பிரம்மாண்டம் கொண்டது. அந்தப் பெயர் கொண்ட இயக்குநர், படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “படத்தின் டிரெய்லர் சிறப்பாக உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துகள். இளையராஜா போல ஜிவி பிரகாஷின் இசையும் படத்தை அடுத்த லெவலுக்க்கு எடுத்துப் போகும். நிச்சயம் அவர் அடுத்தடுத்து நடிகராகவும் பெரிய வெற்றிகளைப் பார்க்க வேண்டும். ‘லவ் டுடே’ இவானாவுக்கும் வாழ்த்துகள். ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா சாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு சிலிர்த்து விட்டேன். சிறப்பான நடிகர். நான் சினிமாவுக்கு வர காரணமே அவரது ‘16 வயதினிலே’ படம்தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இயக்குநர் பாரதிராஜா, “இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்”.