நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகில் கடந்த கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை நயன்தாரா. தற்போது மண்ணாங்கட்டி உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்  இந்நிலையில்,ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்தில்  நயன்தாராவுடன், யோகி பாபு, தேவதர்ஷினி, கவுரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்பட  பலர் நடித்துள்ளனர்.சான் ரோல்டன்  இசையமைத்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை  ஆர்.டி.ராஜசேகர் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  நிறைவடைந்துள்ளது படப்பிடிப்பின் இறுதி நாளில்  நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது