
ஜப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது ’வா வாத்தியாரே’படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படமொன்றிலும் நடிக்க உள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது
கார்த்தியின் 27 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு தற்போது ‘மெய்யழகன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது . சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும்.இப்பட போஸ்டரில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இடம்பெற்றுள்ளனர். இந்தப் போஸ்டரை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்று மாலை 7 மணிக்கு வெளியான இப்பட போஸ்டரில் தஞ்சாவூர் பெரியகோயில் பின்னணியில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி இருவரும் சைக்கிளில் ஜாலியாக செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.












