மது போதையில் அஞ்சலியை தள்ளி  விட்டாரா பாலகிருஷ்ணா?  

 சந்தானபாரதி – பி.வாசு இணைந்து தெலுங்கில் இயக்கிய ‘சாகசமே ஜீவிதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்டிஆரின் வாரிசு  பாலகிருஷ்ணா. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய,இன்று நூறு படங்களுக்கும் மேல் அதிரடி கதாநாயகனாக நடித்து தெலுங்கு  திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக வலம் வருகிறார். இதற்கிடையே அரசியலில் நுழைந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியாகவும் இருக்கிறார். அதேசமயம் சர்ச்சை விவகாரங்களிலும் அடிக்கடி சிக்கி கொளவ்தும் இவரது வழக்கம்.சமீபத்தில் அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள  கேங்ஸ் ஆஃப் கோதாவரி பட விழா நேற்று நடந்தது.  இயக்குநர் கிருஷ்ண சைதன்யா சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பாலகிருஷ்ணா அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் ஒரு வாட்டர் பாட்டிலும், இன்னொரு வாட்டர் பாட்டிலில் மது நிறத்தில் திரவம் இருந்ததாக கூறப்படுகிறது. . இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த பாட்டிலில் இருந்தது மதுவா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். அதேபோல் நிகழ்ச்சி நடந்தபோது மேடையில் புகைப்படம் எடுப்பதற்காக எல்லோரும் முன்னும் பின்னுமாக  நிற்க,  அதை சரி செய்யும் நோக்கில்  நாயகி அஞ்சலியை ஒதுங்குமாறு பாலையா சைகை செய்தவர்,அஞ்சலியை கையால் சற்று பலமாகத் தள்ளினார். பாலய்யா அப்படி செய்ததும் அஞ்சலி தடுமாறி, கீழே விழும் நிலைக்கு சென்று மீண்டும் சரியாக நின்றார். இதையெல்லாம் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நாயகி நேஹா ஷெட்டி, பாலய்யாவின் நடத்தையால் அதிர்ச்சியடைந்தார் . ஆனால், அதன் பிறகு அஞ்சலி சிரிக்க அது நடக்காதது போல் பாலையா சரியாக பேசினார். அதிர்வை ஏற்படுத்திய இந்நிகழ்வை பார்த்த ரசிகர்கள், பாலைய்யா சரக்கை போட்டுவிட்டு அஞ்சலியிடம் இப்படி நடந்துகொண்டாரா? என கேட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.