சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், ‘லக்கி பாஸ்கர்’ . 1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் முற்பகுதியிலும் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
வங்கி ஒன்றின் காசாளரான ‘லக்கி’ பாஸ்கரின் சுவாரஸ்யமான மற்றும் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தை இந்தப் படம் விவரிக்கிறது. துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படம், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது