ஜூன் மாதம் திரைக்கு வரும்,’பித்தல மாத்தி’!

நடிகர்தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பித்தல மாத்தி’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் உமாபதி ராமையாவுடன் , சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், ‘ஆடுகளம்’ நரேன், ‘காதல்’ சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ‘ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ்’ ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.இப்படம் குறித்து தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், ” பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ” என்கிறார்.