ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா பாலகிருஷ்ணா?
இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த் அடுத்தாதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள கூலிப்படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி தொடங்கி சென்னை மற்றும் ஐதராபாத் என ஆகிய இடங்களில் நடத்த படவுள்ளது. இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இப்படத்தை தொடர்ந்து,அடுத்ததாக மீண்டும் ஜெயிலர் 2 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணையவுள்ளார் இதில் பிரபல தெலுங்குப்பட நடிகர் பாலகிருஷ்ணாரஜினியுடன் இணையவுள்ளார் என்கிறார்கள்.