ரஜினிகாந்துடன் சரத்குமார் குடும்பத்தினர் திடீர் சந்திப்பு!

நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில்  போட்டியிட்ட நடிகை ராதிகாசரத்குமார்,  நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  ஆகிய இருவரையும் விட அதிக வாக்குகள் பெற்று  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்  வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நடிகை ராதிகாசரத்குமார்  தனது தேர்தல் தோல்வி பற்றி சமூக வலைத்தளத்தில்,”எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல. சில போர்கள் இந்த உலகத்திற்கு யாரோ ஒருவர் போர்க்களத்தில் இருந்தார் என சொல்லத்தான். உங்கள் அன்புக்கு நன்றி” என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார் என குடும்பமாக சந்தித்து பேசியுள்ளனர் மகள் வரலக்ஸ்மி திருமணத்தில் கலந்து கொண்டு அவரை ஆசிர்வதிக்க வேண்டும் என அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்துள்ளார் சரத்குமார். இது குறித்த புகைப்படங்களை நடிகை வரலட்சுமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.