ராமோஜி ராவ் பிலிம்சிட்டி நிறுவனர் மரணம்!
ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற படப்பிடிப்பு தளம் தான் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கில், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களின் படப்பிடிப்புகளும் இங்கு தான் நடத்தப்பட்டது. நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித் நடித்த துணிவு, வலிமை, ரஜினியின் அண்ணாத்த போன்ற படங்கள் இந்த பிலிம் சிட்டியில் தான் படமாக்கப்பட்டன.இந்நிலையில், இந்த பிலிம் சிட்டியை உருவாக்கிய ராமோஜி ராவ் (வயது 88.) இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். ராமோஜி ராவின் மறைவு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரதமர் மற்றும் தமிழக ஆந்திர கர்நாடக முதல்வர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ‘ஈ நாடு’ என்கிற பத்திரிகையையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.