தெருக்கூத்து நிகழ்ச்சியை நடத்தி   கின்னஸ் சாதனை படைத்த வெங்காயம் இயக்குனர்!


‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.சமீபத்தில் ,தமிழ்நாடு அறக்கட்டளையின் உதவியுடன்  அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சியை நடத்தி   கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார். 

இது குறித்து சென்னையில்,இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறுகையில்,”என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘வெங்காயம்’ எனும் திரைப்படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் அழுத்தமாக விவரித்திருந்தேன். நான் திரைத்துறைக்கு வந்த பிறகு தான் தெருக்கூத்து கலையின் அசலான மதிப்பினை உணர்ந்தேன். இது அழிந்து வரும் கலை… நலிவடைந்து வரும் கலை… என சொல்வதை விட இதற்கு ஆக்கப்பூர்வமாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்.இதற்கான முன்னெடுப்பை ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன்.

இந்தக் கலைக்கான தமிழ் மொழி வடிவத்தை அவர்களுக்கு கற்பித்து மேடை ஏற்றுவது என்பது கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. பின்னர் தெருக்கூத்து கலையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற வட இந்திய நாயகர்களை போற்றும் கதைகள் தான் அதிகம். ஏன் தமிழில் நாயகர்கள் இல்லையா..? தமிழில் கதைகள் இல்லையா..?  என தேடத் தொடங்கினேன். அதன் பிறகு சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றை வாசித்த போது ஏராளமான கதைகள் கிடைத்தன. 

நம் ஊரில் கூத்தாடி என்பது தகாத சொல். அதாவது கெட்ட வார்த்தை.  நம் சமூகத்தில் தரக்குறைவாக மதிப்பிடப்படும் தெருக்கூத்து கலையை உலகத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சியாக நடத்தி அதற்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்தது என்பது இந்த கலையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்குமான கௌரவம் என கருதுகிறேன். தற்போது ,” என்றார். ஏற்கனவே தனி ஒருநபராக , 4 ஆண்டுகள் செலவிட்டு ‘ஒன்’ என்ற படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ள இயக்குனர் ராஜ்குமார் அடுத்ததாக  தான் இயக்கி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்