ஸ்கூலுக்கு போக மாட்டேன் அடம் பிடித்த பேரன்: சமாதானப்படுத்தி அழைத்துச்சென்ற தாத்தா ரஜினி!!

ரஜினியின் 2 வது மகள் சௌந்தர்யா,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   நேற்று  காலை சுமார் 9.40 மணி அளவில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து,”இன்று எனது மகன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டே இருந்தான். அவனுடன் நான் எவ்வளவோ போராடியும் அவன் தனது முடிவில் இருந்து பின் வாங்க மறுத்துவிட்டான். இந்த நிலையில் நான் உடனே சூப்பர் ஹூரோ தாத்தாவான எனது அப்பாவை கூப்பிட்டு விவரத்தைச் சொன்னேன். உடனே அவர் எனது மகனிடம் அன்பாக பேசி அவனை அவரே பள்ளியில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார்.அப்பா நீங்கள் திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் உங்களிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாகவே செய்து விடுகின்றீர்கள் அப்பா” என பதிவிட்டுள்ளார். சௌந்தர்யாவின் இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பதவி வருகிறது.