தமிழ்த்திரையுலகில் ஒரு காலத்தில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்த நடிகை ஓவியா, சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் . ஆனால் ஒரு சில படங்களைத் தவிர புதிய பட வாய்ப்புகள் அமைய வில்லை. இந்நிலையில், அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் சில புகைப்படங்களும் கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் வழக்கம் இந்நிலையில், தற்போது தனது அருகே சரக்கை வைத்துக்கொண்டு… கையில் பொறித்த நண்டை ‘சைடிஷ் ‘ஆக சாப்பிட்டுக் கொண்டே…’ ட்ரிங்கிங் இஸ் இஞ்சூரிஸ் டூ ஹெல்த். என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாகி வருகிறது.