32 ஆண்டுகளை கடந்த அஜித் !
கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.இந்நிலையில் அஜித்குமார் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்., தற்போது 32 ஆண்டுகளில் அஜித் கடந்த வந்த பாதையை குறிப்பிட்டு ‘விடாமுயற்சி’ படத்திலிருந்து அஜித்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில்,“32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும், யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” என எழுதப்பட்டுள்ளது. இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தது. தொடர்ந்து அவர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார்.