‘கோட்’படத்தின் `ஸ்பார்க்’ 3வது பாடல் வெளியானது!
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜயின் 68 வது படமாக உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் 2 வேடங்களில் நடித்துள்ள . இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பட்டாலும்,. இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சங்களை சந்தித்தது.இந்நிலையில், இப்படத்தின் 3வது சிங்கிள் ஸ்பார்க் எனும் பாடல் இன்று வெளியாகியுள்ளது.இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர்.
மேலும், யுவனின் குரலும் மற்றும் கங்கை அமரனின் ஆங்கிலம் கலந்த தமிழ் வரிகளும் இந்த பாடலுக்கு மிகவும் பக்கபலமாய் அமைந்துள்ளது என்றே கூறலாம். தற்போது இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரம் பார்வையாளர்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, மேலும் மிக விரைவாகவே மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.