சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக உருவான ‘அமீகோ’!

பிரத்யக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  பி. கிரிஜா தயாரித்துள்ள புதிய படம், ‘அமீகோ’ .இப்படத்தில் சாந்தினி தமிழரசன், அர்ஜுன் சோமையாஜுலா, மனிஷா ஜஸ்னானி, பிரவீன் இளங்கோ, வாட்சன் சக்கரவர்த்தி, பிரக்யா பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சைபர் -ஹாரர்- ஃபேண்டஸி -திரில்லர் – என கலவையாக உருவாகியுள்ள இப்படத்தை  பி. பிரவீன் குமார் இயக்கியுள்ளார்.   வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் கூறியதாவது, ” அமீகோ திரைப்படம் இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படமாகும். இந்திய திரை உலகினரை திரும்பிப் பார்க்க வைக்கும் புதுமையான திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.அமீகோ என்றால் நண்பர் என பொருள். இப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை.. திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌ ஊடக துறையில் பணியாற்றும் நண்பர்கள் குழுவிற்கு இடையேயான உரையாடலின் போது… எதிர்பாராத வகையில் அன்னியன் ஒருவனின் காணொளி அழைப்பு குறிக்கிடுகிறது. இவர்களின் உரையாடலில் எதிர்பாராமல் ஊடுருவிய அந்த அன்னியன் .. எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்துகிறான். அந்த மர்ம உருவம் – நண்பர்களைப் பற்றிய அந்தரங்கமான விசயங்கள்.. அவர்கள் மறைக்கும் இருண்ட ரகசியம் ..‌ தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறது. அத்துடன் அவர்களை ஒரு வகையான விளையாட்டில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கிறது. அவர்களும் வேறு வழி இல்லாமல் ஆபத்தை உணர்ந்தே அந்த விளையாட்டில் மூழ்குகிறார்கள். அவர்களின் ஆன்லைன் உலகத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையிலேயான நிலைபாடு கேள்விக்குறியாகிறது. அந்த நண்பர்கள்- மர்ம மனிதன் வீசிய வலையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.இணையதளம் ,செல்போன் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை பற்றியும், அமானுஷ்ய விஷயங்களை பற்றியும் ரசிகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். நாம் தினமும் பயன் படுத்தும் கையடக்க  செல்போன் மூலம் என்னவெல்லாம் நேர்கிறது என்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளோம் . இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதன் பிறகு தங்களது  செல்போனை உயிர் நன்பனுக்கு கூட கொடுக்க  மாட்டார்கள். இன்றைய இளம் தலைமுறையினர்  கவனக்குறைவாக அல்லது அலட்சியமாக செய்யும் ஒரு செயல் அவர்களது வாழ்கையையே எப்படி தலைகீழாக புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் பரபரப்பான திகிலான திரைப்படமாகியுள்ளது