நான்கு பாகங்களாக உருவாகும் ‘டிமான்ட்டி காலனி 2′

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’.  கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து இப் படத்தின் 2 ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடித்துள்ள  இப்படத்தில் பிரியா பவானி சங்கர்,அருண்பாண்டியன்,அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன்   முத்துக்குமார், சர்ஜானோ க்ஹலிட் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.  வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள  இப்படம் குறித்து நாயகன் அருள் நிதி கூறியதாவது,”இப்படத்தின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத்  தொடர்ந்து, 2ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டோம்   ஆனால் கதை அமையவில்லை . ‘கோப்ரா’ பட சமயத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்னை அழைத்து, இரண்டாம் பாகத்துக்கான  ஒன் லைனை சொன்னார். மிகவும் நன்றாக இருந்தது. அப்போதே இதன் 3.ம், 4ம் பாகத்துக்கான கதை மற்றும் லீடும் கிடைத்தது.  2ம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடக்கும் வரவேற்பை பொறுத்தே இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும். முதல் பாகத்தில்  ஸ்ரீனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நான், 2 ம் பாகத்தில் ஸ்ரீனியின் சகோதரன் ரகு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இதில் பிரியா பவானிசங்கர்,அருண் பாண்டியன்  முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.இப்படத்தில் இடம் பெறும் மிக பெரிய மீன்  தொட்டியுடன் கூடிய  ஓட்டல் அரங்கம் ஒன்றுக்காக ஓசூர் அருகே பிரமாண்ட அரங்கம் அமைத்து  நடத்தினோம். ஒவ்வொரு நாளும் மீன் தொட்டியில் இருந்து கசியும் நீர் அரங்கத்தையே காலி பண்ணிடும் மீண்டும் அரங்கத்தை புதுப்பிக்க லட்சக்கணக்கில் செலவானது. மேலும் இப்படத்தில் சிஜி காட்சிகள் ரசிகர்களுக்கு படு மிரட்டலாக அமையும். ‘டிமான்ட்டி காலனி’. முதல் பாகத்தை போல் இதன் 2 ம் பாகமும் ரசிகர்கள்  மத்தியில்  பெரும் வரவேற்பை பெறும் என்பது உறுதி..என்கிறார்.