“நைட்டுக்கு பொண்ணு வேணும்.!” நடிகர் ரியாஸ் கான் மீது பிரபல நடிகை புகார்.!

“மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோம்”னு புரட்சிக் கவி பாரதி பாடியதை அவரது பிறந்த- இறந்த நாளில் நினைவு படுத்துவதுடன் சரி,அதற்குப் பின்னர் பாரத மாதாவின் செல்லப்பிள்ளைகள்  மாதர்களைத் தேடிச்சென்று தினவுகளை தீர்த்துக்கொள்வார்கள். இது அவர்களது புரட்சிப் பாரதம்.!

மணிப்பூர் வீதிகளில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தினார்கள். கற்பழித்து படுகொலை செய்தார்கள். சற்றும் கவலைப்படாமல் செங்கோலை குருதிச் சேற்றில் அமிழ் த்தியது ஒன்றிய அரசு.  நாடெங்கும் பாலியல் வன் புணர்வு.பாவாடை கட்டத்தெரியாத சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை . சிதைக்கிறார்கள். ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் வன் புணர்வில் ஒற்றுமை . நாயிலும் கேடு கெட்டவர்கள்.

சரி ,மேட்டருக்கு வாய்யா !

வந்தோம்.

கேரளத் திரைஉலகில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக ஹேமா கமிஷன் கண்டு பிடித்திருக்கிறது. !!!

அங்கு இயற்கைப் பேரிடர் நூற்றுக்கும் அதிகமானவர்களை வாரி விழுங்கிய நிலையில் இந்த கமிஷன் திரை உலகத் தலைகளை உருட்டிவிட்டிருக்கிறது .நீக்கமற நிறைந்திருக்கிற தேசிய கொடுமைதான் பாலியல் வன் புணர்வு.! திறமைசாலிகள் தங்கபஸ்பம் சாப்பிடுகிறார்கள் . சமூகம் அவர்களை கொண்டாடுகிறது.

ரேவதி சம்பத் என்கிற நடிகை. சித்திக் என்கிற முன்னணி நடிகரை புரட்டிப் போட்டு வெளுத்திருக்கிறார் .

“எனக்கு கல்விப் பருவத்திலேயே நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதை எப்படியோ தெரிந்து கொண்டிருக்கிறார்  சித்திக் . சரியான கிரிமினல்.!ஒரு படத்தின் பிரி வியூவுக்காக என்னை அழைத்தார். நான் என்  குடும்பத்துடன் சென்றேன்.

“இந்த படத்தைப் பற்றி நாம்  தனியாக டிஸ்கஷன் செய்ய வேண்டும் . உன்னுடைய பேமிலி யை அனுப்பிவிடு என்று வற்புறுத்தியதும் அவர்களும் போய் விட்டார்கள்.

நான் தனியாக மாட்டிக்கொண்டேன்.

ஆரம்பத்தில் தொழில் ரீதியாகத்தான் பேசினார். நேரம் ஆக ஆக பேச்சு செக்ஸ் ரீதியாக இருந்தது. கதவை பூட்டினார். பலவந்தம் செய்தார். கத்தியும் பலனில்லை. காரியத்தை சாதித்துக்கொண்டு வெளியே சென்று பிரஸ் மீட் நடத்தினார். நான் பூட்டிய அறைக்குள் அழுது கொண்டிருந்தேன். பிரஸ் மீட் முடிந்து திரும்பி வந்தவர் மறுபடியும் பலவந்தம் செய்தார்.

நிறைய படங்களில் வாய்ப்புகள் தருவதாகவும் அப்போதெல்லாம் படுக்கைக்கு வரவேண்டும். வெளியில் சொன்னால் எனக்கு ஆபத்து என்பதாக மிரட்டினார் “என்று மாத்ருபூமி மீடியாவுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

சித்திக் என்ன சொல்கிறார்? போலீசில் புகார் செய்திருக்கிறார். 

இன்னொரு மேட்டர் . தில்லாலங்கிடி ரியாஸ் கானை பற்றி. !

மலையாள சேனல் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில் நடிகர் ரியாஸ் கானைப் பற்றியும் சொல்லியிருக்கிறார் சித்திக் மீது குற்றம் சாத்தியவர்। இந்த தகவலை இந்தியா டு டே என்கிற மீடியா அம்பலப்படுத்தியிருக்கிறது.

“அடிச்சி கேரி வா ” என்று ரியாஸ் கான் போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்தார். 9 நாள் கொச்சியில்தான் இருக்கேன். நைட்டுக்கு ஏதாவது பொண்ணு ஏற்பாடு பண்ணி வை ” என்று ரியாஸ் கான் சொன்னதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.எல்லாமே ஆண் ஆதிக்கம் என்கிற திமிர்தான்.!