மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா அறிக்கை காரணமாக மோகன் லால் தலைமையிலான மலையாள திரையுலகின் ‘அம்மா’ நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது . நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர் தொடர்ந்து சிறப்புக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மோகன்லால் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ’தங்கலான்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை பார்வதி, “மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்ட செய்தியை கேட்டபோது இதுவரை சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் எந்த அளவுக்கு கோழைகள் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து, நடிகர் சங்கத்தை கலைத்திருப்பதை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஹேமா கமிட்டி முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் நடிகர் சங்க பொறுப்பாளர்கள் ராஜினாமா முடிவை எடுத்திருந்தார்கள் நமது தேவைகளை பற்றி பேச நடிகைகளான என்னை போன்றவர்களுக்கு அங்கு உரிமை இல்லை, இந்த நிலை மாற வேண்டும் என்றால், சிறந்த தலைமை வரவேண்டும். வரும் காலத்திலாவது மோகன்லால் போல் கோழைகள் தலைவராக இல்லாமல் நல்ல தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார் பார்வதியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.