தடைகளை தகர்ப்போம், தமிழ் நாட்டில் வலம் வருவோம்! விஜய் அறிக்கை!!

சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அக்கட்சியின்அங்கீகாரத்திற்காக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தார். இதற்கிடையில் கட்சியின் கொடியை சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில் விஜய் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இது குறித்து, நடிகர் விஜய் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடைகளை தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, தமிழ் நாட்டில் வலம் வருவோம்!’ என்று குறிப்பிட்டிருந்தார். இது அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.