நடிகை தீபிகா படுகோனேவிற்கு பெண்குழந்தை பிறந்தது!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோனே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோன் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் தீபிகா படுகோனே கர்ப்பமடைந்துள்ள அறிவித்தார்.
அதுதொடர்பான ஃபோட்டோஷூட்டும் நடத்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டானது . இந்நிலையில் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் அவர்களது குடும்பம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை பதிவிட்டு வருகிறார்கள்.