ரஜினியின் வேட்டையன் டிரைலர் வெளியானது!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் வேட்டையன்.இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. . படம் வெளியாக இன்னும் 8 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த டிரைலர் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய மொத்தம் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.. மொத்தம் 2 நிமிடங்கள் 39 நொடிகள் கொண்ட இந்த டிரைல ரில் பாடல்கள் எதுவும் இடம் பெறவில்லை. அதிரடியான சண்டைக் காட்சிகளால் டீசர் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல் நிலை தற்போது சீராக்க உள்ளதாகவும் அவர் நாளை மாலை அல்லது நாளை மறு நாள் வீடு திரும்புவார் என்கிறார்கள்.