எனது வாழ்நாள் சகோதரனாக கார்த்திக் சுப்புராஜ்! நெகிழ்ந்த சூர்யா
கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்தமானில் தொடங்கிய இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடந்து வந்தது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இது குறித்து புகைப்படத்துடன் நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், ” ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான ஷூட்டிங் பல இடங்களில் முடிந்திருக்கிறது. அற்புதமான திறமையான படக்குழுவினருடன் ஏராளமான நினைவுகள் கிடைத்திருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் எனது சகோதரனாக உருவாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை தந்ததற்கு படக்குழுவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்