சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் கால்கள் இல்லாத பிச்சைக்காரனாக நடித்துள்ள கவின்,சிக்னலில் காத்திருக்கும் ஆட்டோ டிரைவரிடம்,பிச்சை கேட்க, அவரோ டேய் நானே , காலையில் இருந்து சவாரி கிடைக்காமல் கடுப்பில் இருக்கேன் என திட்டவும், க்வினோ முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு, எனக்கு மட்டும் கால் இருந்தால் நானும் உங்கள மாதிரி ஆட்டோ ஒட்டிருப்பேன் என சொல்லவும், மனம் இறங்கியஆட்டோ டிரைவர் 10 ரூபாய் காசை கவினின் தட்டில் போடுகிறார். இந்நிலையில், அந்த பக்கம் சாவு ஊர்வலம் ஒன்று வர அதன் மேளச் சத்தத்தை கேட்டு விட்டு தலையை ஆட்டிக்கொண்டே செல்லும் கவின், தனது கால்களை நீட்டி எழுந்து குத்தாட்டம் போடுகிறார். அதை பார்த்து ஆட்டோக்கார ர் அதிர்ச்சியில் உறைய டீசர் நிறைவடைகிறது. பக்கா காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சிவா கார்த்திகேயனின் அமரனுக்கும்,ஜெயந் ரவியின் பிரதருக்கும் கடும் சவாலாக இருக்கும் என்கிறார்கள்.