பல ஹீரோக்களிடம் சென்றுவந்த கதை! ஜீவா உடைத்த ‘பிளாக்’ ரகசியம்!!
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பிளாக்’.அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார் இப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகவுள்ளது இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது
நாயகன் ஜீவா பேசும்போது,
நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன். அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும்.
இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது,
