‘சூர்யா 45’: படப்பிடிப்புக்காக ஆர். ஜே. பாலாஜி செய்த வேலை !

சூர்யா  நடிப்பில்,சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகியுள்ள  “கங்குவா” வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த  அவரது  44வது படத்தின் படப்பிடிப்பும்  முடிவடைந்துவிட்டதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், சூர்யாவின் 45வது படத்தை நடிகரும் இயக்குனருமான ஆர். ஜே. பாலாஜி இயக்குவார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது  சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தளங்களை தனது குழுவினருடன் மும்முரமாக தேர்வு  செய்து வரும்  ஆர். ஜே. பாலாஜி,அது குறித்த  புகைப்படத்தை   தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
 வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரிக்க உள்ள இப்படத்துக்கு  ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் , இது குறித்த அதிகாரபூர்வ முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.