மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் தொடங்கியுள்ளது. அதற்காக படக்குழு மொத்தமும் ஸ்பெயினில் முகாமிட்டுள்ளது.
தற்போது இப்படத்திற்காக அஜித் புது கெட்டப்புக்கு மாறி இருக்கும் ஒரு புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது.இந்நிலையில், ‘மாட்ரிட்’ நகரில் நடந்து வரும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயினுக்கு அஜித்தின் குடும்பமும் சென்றுள்ளது. வழக்கமாக அஜித்தின் படப்பிடிப்புத் தளங்களுக்கு அவரது குடும்பத்தினர் செல்வதில்லை. ஆனால் இம்முறை சென்றுள்ளதற்கு முக்கிய காரணம் ஸ்பெயினில் நடைபெற்ற ரியல் மேட்ரிட் அணிக்கும், வில்லர் ரியல் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டியை காணத்தான். ஆத்விக் கால் பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்கு தனது மகனுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை நடிகை ஷாலினி வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ அஜித் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
View this post on Instagram