‘கமல்ஹாசன் 237’ : ஜனவரியில் படப்பிடிப்பு!
உலகநாயகன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைப்’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இப்படத்தில் கமலுடன் சிம்பு,திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் என பல பிரபலங்கள் பாலிவுட்நடிகர்களான பங்கஜ் திரிபாதி, அலி பசல் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல சண்டை இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் புதிய படம் ஓன்று உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கமல்ஹாசனின் 237 வது திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் திரைக்கதை முழுவதுமாக தயாராகி விட்டதாகவும் அடுத்த கட்டமாக நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும் இந்த பணிகள் அடுத்த இரண்டு மாதத்தில் முடிவடைந்து வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி அதே வருடம் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது