தமிழ்த்திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்து வரும் நடிகை திரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் தொடங்கிய தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் பிஸியான நடிகையாக ‘டாப்’ நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். விஜய்யுடன் அவர் நடித்த ‘லியோ’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கோட்’ ஆகிய படங்கள் அவருக்கு மிகச் சிறப்பாகவே கை கொடுத்துள்ளது, இந்நிலையில் திரிஷா, அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார் மேலும் நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரிஷாவிற்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாகவே அமைந்துள்ள நிலையில், தனது பிஸியான ஷெட்யூல் இடையே தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா கொண்டாட்டத்திலும் தவறாமல் ஈடுபட்டு வருகிறார் மலை பாங்கான பகுதிகளில் சுற்றுலா செல்வது திரிஷாவுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தனது நன்பர்களுடன்,மொராக்கோ நாட்டின் மலைப்பிரதேசத்தில் தான் மேற்கொண்ட சுற்றுலா பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள திரிஷா, அப்புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, ‘தன்னைத்தானே நேசித்தால் மட்டுமே இத்தகைய இடங்களுக்கு செல்ல முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.இந்த ஜாலி ட்ரிப்பில் கோட் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் கலந்து கொண்டுள்ளார்.மொரோக்காவில் நள்ளிரவு பார்ட்டியில் த்ரிஷா தனது தோழிகளுடன் வைப் செய்யும் புகைப்படங்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டால் வெளியிட்டு வருகிறார் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.