லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கானின் ‘கஜினி 2’ உருவாகிறதா?

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் அமைக்கப்பட்டு வந்த பிரமாண்ட அரங்கில் தொடங்கப்பட்டுள்ளது இதில் அமீர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் இப்படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் கலந்து கொள்ளவுள்ளார் இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இன்னொரு படத்திலும் இணைய உள்ளனராம்.தற்போது லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்ததாக ‘கைதி 2 ‘ படத்தை இயக்குவார் எனவும், இப்படத்தை தொடர்ந்து , 2026 ஆம் ஆண்டு, அமீர்கான் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் இப்படத்திற்கு ‘கஜினி 2’ என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே சல்மான்கானின் சிக்கந்தர் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாசும் கஜினி -2 படத்துக்காக மீண்டும் இணையலாமா என அமீர்கானுக்கு தூது விட்டுள்ளாராம். இதில் ஜெயிப்பது ஏ ஆர் முருக தாசா,அல்லது லோகேஷ் கனகராஜா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களின் வெற்றியை பொறுத்து தான் அமீர்கானின் முடிவு இருக்கும் என்கிறது பாலிவுட் வட்டாரம் .