தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே ,தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்து வந்தவருக்கு ரஜினியின் கபாலி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். இந்திய நடிகையாக வலம்வந்த ராதிகா ஆப்தேவிற்கு ஹாலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்று படங்கள் ஆங்கிலத்தில் நடித்தார்.இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் ராதிகா ஆப்தேவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டு, 2012ம் ஆண்டிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை ராதிகா ஆப்தே விடவில்லை. இதையடுத்து தங்களது தொழில் நிர்பந்தம் காரணமாக ராதிகா மும்பையிலும், பெனடிக்ட் இங்கிலாந்திலும் வசித்து வந்தனர். அவ்வப்போது தன்னுடைய காதல் கணவரை பார்க்க ராதிகா ஆப்தே லண்டன் சென்று வந்தார்.
இதனால், இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கூடதகவல் பரவியது. இந்நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தற்போது ராதிகா ஆப்தே தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராதிகா ஆப்தேவுக்கு திருமணமானதே பல ரசிகர்களுக்கு தெரியாத நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். சிஸ்டர் மிட்நைட் என்ற ஆங்கில படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ள நிலையில், அந்தப் படத்தின் லண்டன் பிஎஃப்ஐ பிலிம் பெஸ்டிவலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.












