‘ஓ மை கடவுளே’ படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் ‘டிராகன்’ படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக மமீதா பாஜூ நடித்து வருகிறார் .இந்நிலையில் இப்படத்தில் தற்போது பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இணைந்துள்ளனர். இது குறித்த தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.இந்த படத்திற்கு லியோ ஜோன்ஸ் இசையமைத்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சிம்பு நடிக்கும் புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளார்