கள்ளு பழசா இருந்தா கிக்கு திக்கா இருக்கும்னு குடிமகன்கள் சொல்லி மகிழ்வதை கேட்டிருக்கிறேன். ‘எமக்கு தொழில் ரொமான்ஸ் ‘கதையும் பழசுதான்.அதிலும் ரொமான்ஸ் என்கிற சொல் நம்மை ரொம்பவே படுத்தி எடுத்திருந்தது.
ஆர்வமுடன் வெண்திரையை பார்த்தேன் .!
சின்ன பிரச்னையினால் காதலர்கள் பிரிகிறார்கள் . பிரிந்தவர்கள் சேர முயலுவதும் அதற்கு பல பல தடைகள் வருவதும் இயல்பு. வித்தியாசமான அந்த தடைகளை காதலர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? சிரிப்பாய் சிரிக்க வைக்கவேண்டும் என்று அவர்கள் எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் என்பதை அசோக் செல்வன் -அவந்திகா மிஸ்ரா ரசித்து நடித்து நம்மை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். !
இன்டஸ்ட்ரீயில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, இருவருக்கும் திறமையான நடிகர்கள் என்கிற பெயர் இருக்கிறது. இந்தப் படத்தில் எந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்? சொல்ல முடியவில்லை. அழகம்பெருமாள்,படவா கோபி ஆகியோருக்கு முக்கிய வேடங்கள். அவ்வளவுதான்.! .
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் இசை ஞானியும் இருக்கிறார்,
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் கேமரா இளமையை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.,
இயக்குநர் பாலாஜி கேசவன் உழைப்பு பாராட்டுக்குரியது .படம் ?
—–தேவிமணி