சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை கெடுத்த தயாரிப்பாளர்!- குமுறும் விக்னேஷ் சிவன்!!
‘லவ் டுடே’ படத்தை தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார். நடிகை நயன்தாரா தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தப் படத்திற்கு எல்ஐசி என்று பெயரிடப்பட்டது. இந்த டைட்டில் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் எல்ஐகே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது, இந்தப் படத்தை கடந்த 2018ம் ஆண்டிலேயே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருந்த நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியதாகவும் அதனால் படம் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.படத்தின் கதைக்களம் எதிர்காலத்தில் நடப்பது போன்று உருவாகியுள்ளதாகவும் அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததாகவும் கூறிய விக்னேஷ் சிவன், இதன் காரணமாக தன்னிடம் வந்து இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் எதிர்காலத்தை வைத்து படமெடுக்காமல் நிகழ்காலத்தில் படமெடுக்கக் கூறியதாகவும்,பாகுபலி படம் பீரியட் படமாக அமைந்த நிலையில், பட்ஜெட் காரணமாக அந்தப் படத்தை நிகழ்காலத்தை வைத்து எடுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் நிகழ்காலத்திற்கு படத்தை மாற்ற சொன்ன அந்த தயாரிப்பாளரிடம் தான் அடுத்ததாக போகவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும்,இதனால் தான் இந்தப் படத்தை தானே தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.