‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’!

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மரகதக்காடு படத்தில் நடித்தவர். மேலும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் ஆன ஜமீலா மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி தொடர்களிலும் நடித்தவர். கதாநாயகியாக சோனியா நடிக்க முக்கிய வேடத்தில் முருகா அசோக் குமார் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் பூஜை நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ்,, நடிகர் சக்தி குமார், லொள்ளு சபா மாறன், இயக்குநர் பாரதி கணேஷ், நடிகர் ரோபோ கணேஷ், விநியோகஸ்தர் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மரகதக்காடு படத்தில் நடித்தவர். மேலும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் ஆன ஜமீலா மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி தொடர்களிலும் நடித்தவர். கதாநாயகியாக சோனியா நடிக்க முக்கிய வேடத்தில் முருகா அசோக் குமார் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் பூஜை நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ்,, நடிகர் சக்தி குமார், லொள்ளு சபா மாறன், இயக்குநர் பாரதி கணேஷ், நடிகர் ரோபோ கணேஷ், விநியோகஸ்தர் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.முன்பெல்லாம் பத்திரிகை, டிவி விமர்சனங்களை பார்த்துவிட்டு மக்கள் படத்திற்கு சென்றார்கள். இப்போது மக்களே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும். நிறைய சிறு தயாரிப்பாளர்கள் இப்படி நிறைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய புண்ணியம். அந்த புண்ணியமே உங்களுக்கு வெற்றியாக அமையும்” என்றார்.

நடிகர் முருகா அசோக் குமார் பேசும்போது, “தயாரிப்பாளர் வினோத் வி சர்மாவை வேறு ஒரு சந்திப்பில் இருந்து எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. அதன் பிறகு சினிமாவில் அவர் அடி எடுத்து வைப்பதாக என்னிடம் கூறியதுடன் நீங்களும் இந்த படத்தில் இருக்கிறீர்கள் என அழைத்தார். அதேபோல இயக்குநர் ராமச்சந்திரனையும் ஒரு போராடும் உதவி இயக்குனராக நான் பார்த்திருக்கிறேன். ஹைபர் லிங்க் முறையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த கதையை அவர் சொல்லும்போதே எனக்கு பிடித்து விட்டது” என்று கூறினார்.