தயாரிப்பாளர்கள் சங்க அவசரப் பொதுக்குழு கூட்டம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அந்த அறிக்கையில் இன்று 07.12.2024 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர் என். ராமசாமி துணைத்தலைவர்கள் ஜி. எம். தமிழ் குமரன், திருமதி அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமன செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் அனைவரின் ஒப்புதலுடன் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அமல்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆகையால் இந்த விஷயம் குறித்து சங்க உறுப்பினர்களிடையே கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளதால் வருகிற 16 12 20024 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதா பார்க்கின் ஹோட்டலில் அவசரப் பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சங்க உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.