‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள புதிய படம், ‘விடாமுயற்சி’. லைகா பட நிறுவனத்தின் நீண்டகால தயாரிப்பில்உருவாகி வந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது, இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது . அஜித், திரிஷா நடிப்பில் காதல் மற்றும் அட்டகாசமான குத்துப் பாடலாக உருவாகியுள்ள சவாதீகா எனத்தொடங்கும் இப்பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ள நிலையில், அறிவு பாடல் வரிகளை எழுதியுள்ளார். சவாதீகா பாடலில் சீமான் பேசி, இணையத்தில் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்த ‘இருங்க பாய்’ வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.