பொங்கல் ரேஸில் ‘மத கஜ ராஜா’!
சுந்தர். சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி, சோனு சூட், சதீஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில், அதிரடி நகைச்சுவை படமாக உருவாகியுள்ள, ‘மத கஜ ராஜா’ வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக நடிகர் சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.கடந்த 2013ம் ஆண்டே சுந்தர். சி இயக்கத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியாகவிருந்த நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் கடன் பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடாமல் கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில்,மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை தாங்கள் கேட்டும் தயாரிப்பாளர் தர மறுக்கிறார் என விஷால் மற்றும் சுந்தர். சி அளித்த பேட்டிகளில் கூறி வந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருப்புக்கு பின்னர் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.நடிகை அஞ்சலி, கேம் சேஞ்சர் படத்தில் அப்பா ராம்சரணுக்கு மனைவியாக நடித்துள்ளார். இப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.