நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்!
’காலா’, ‘அரண்மனை3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சாக்ஷி அகர்வால்.நடிகை சாக்ஷி அகர்வால் தனது பால்யகால நண்பரான நவநீத் நவநீத் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் நேற்று கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்
.இது குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில், . ’எங்கள் வாழ்வில் காதலும் மகிழ்ச்சியும் என்றும் இனி நிலைத்திருக்கும்’ என்ற கேப்ஷனோடு தனது காதல் திருமணத்தை அறிவித்திருக்கிறார்.இவருக்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.