நிருபர்களை எச்சரித்த ரஜினிகாந்த்! சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!!
‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது திரைப்படமான கூலி படத்தில் நடித்து வருகிறார்.தாய்லாந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரும் மே மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், வரும் 13ம் தேதி தாய்லாந்தில் நடக்க உள்ள கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,” கூலி திரைப்படத்தின் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது, வரும் 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை இன்னும் சில நாட்கள் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற உள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,” தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறுகிறார்களே? என கேள்வி எழுப்ப, திடீரென கோபமடைந்த ரஜினிகாந்த்,” அவரை நோக்கி விரலை நீட்டியபடி,”என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தேங்க்யூ” என கூறி விட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்நிலையில் ரஜினி விமான நிலையம் வந்திருந்த தகவலை கேட்டு அங்கு குவிந்த ரசிகர்கள்,. ரஜினியை பார்த்த உற்சாகத்தில், ‘தலைவா’, ‘தலைவா’ என கத்திக் கூச்சலிட்ட நிலையில், முகம் சுளித்த ரஜினிகாந்த்,அவர்களை நோக்கி,’அவ்வாறு சத்தம் போடக்கூடாது’ என கூறியவாறு அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.